விராட் கோலியின் பிரம்மாண்ட சாதனைக்கு வேட்டு.. இன்னும் 38 ரன் தான்.. ஜெய்ஸ்வால் சாதிப்பாரா?

விராட் கோலியின் மாபெரும் டெஸ்ட் சாதனை ஒன்றை உடைக்க காத்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் 38 ரன்கள் மட்டும் எடுத்தால் அவர் அந்த சாதனையை முறியடிப்பார்.

2024ஆம் ஆண்டு இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஜெய்ஸ்வால். அவர் 4 போட்டிகளில் 8 இன்னிங்க்ஸ்களில் 655 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இதற்கு முன் சுனில் காவஸ்கர் 1970களில் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 692 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 655 ரன்களும் குவித்து இருந்தார்.

தற்போது ஜெய்ஸ்வால் 655 ரன்கள் எடுத்து விராட் கோலியின் ஒரு சாதனையை சமன் செய்து இருக்கிறார். அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 38 ரன்கள் சேர்த்தால், விராட் கோலியின் 692 ரன்கள் அடித்த சாதனையையும் உடைத்து விடுவார். 46 ரன்கள் சேர்த்தால் சுனில் கவாஸ்கருக்கு அடுத்ததாக ஒரே டெஸ்ட் தொடரில் 700 ரன்களை தாண்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்துவார் ஜெய்ஸ்வால்.

ஏற்கனவே, ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையை முறியடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் 23 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மேலும் சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் அது எளிதில் முறியடிக்க முடியாத சாதனையாக மாறும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *