தந்தையின் ரூ 690,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி… தனியாக சாதித்த இளைஞர்: அவரது சொத்து மதிப்பு
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி தமது தந்தையின் ரூ 690,000 கோடி நிறுவனத்தில் எந்த பொறுப்பும் வேண்டாம் என குறிப்பிட்டு வெளியேறி, தனியாக சாதித்துள்ளார்.
எந்த பொறுப்பையும் ஏற்காமல்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீப காலமாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருபவர் என்பதுடன், அதே அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார்.
அவரது மனைவி சுதா மூர்த்தியும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருபவர் தான். ஆனாலும் நாராயண மூர்த்தியையும் அவர் உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தையும் எவராலும் மறுக்க முடியாது.
நாராயண மூர்த்தி போன்றே அவரது மகனும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எந்த பொறுப்பையும் ஏற்காமல் வெளியேறி, தனியாக நிறுவனம் ஒன்றை உருவாக்கி சாதித்துள்ளார்.
ரோஹன் மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது அவருக்கு 1.67 சதவீதம் பங்குகள் சொந்தமாக இருந்துள்ளது. அந்த பங்குகளில் இருந்து ஈவுத்தொகையாக ரூ 106.42 கோடி வருவாய் பெற்று வருகிறார்.
2014ல் தான் ரோஹன் மூர்த்தியும் இன்னும் இருவரும் சேர்ந்து Soroco என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ரோஹன் மூர்த்தி செயல்பட்டு வருகிறார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு
மட்டுமின்றி 40 வயதுக்கு உட்பட்ட 40 சாதனையாளர்கள் பட்டியலிலும் ரோஹன் மூர்த்தி இடம்பெற்றார். Soroco நிறுவனம் இதுவரை தங்கள் ஆண்டு வருவாய் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும், வெளியான தரவுகளின் அடிப்படையில் 2022ல் ரூ 150 கோடிகள் வருவாய் ஈட்டியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மேலும், ரோஹன் மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஈவுத்தொகையாக ரூ 106 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வந்தாலும், அவரது மொத்த சொத்து மதிப்பு தொடர்பிலும் முறையான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் என்பவரின் மகள் லக்ஷ்மி வேணு என்பவரை 2011ல் திருமணம் செய்துகொண்ட ரோஹன், 2013ல் இந்த தம்பதி பிரிந்ததுடன், 2015ல் விவாகரத்தும் பெற்றுள்ளது.
ரோஹன் மூர்த்தியின் மூத்த சகோதரி அக்ஷதா மூர்த்தி தற்போதைய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.