தோல்வியை நினைத்து அதிகமாக பயப்படும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

பொதுவாகவே உலகில் அனைவருக்கும் வெற்றியடைவதற்கு தான் ஆசை இருக்கும். தோல்வியடைய வேண்டும் என நினைத்து உலகில் யாரும் எந்த வேலையையும் தொடங்குவதில்லை.

ஒரு சிலர் வெற்றி தோல்வி பற்றி சிந்திக்காமல் தங்களின் கடமையை செம்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள் இன்னும் சிலர் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து

ஆனால் குறிப்பிட்ட சிலர் மனத்திற்குள் எப்போதும் தோல்வியை நினைத்து பயந்துக்கொண்டே இருப்பார்களாம் அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பவர்கள் , கன்னி ராசிகாரர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள், எதை செய்தாலும் தோல்வியடைந்துவிடக் கூடாது என சிந்தித்து கொண்டே இருக்கக் கூடியவர்கள்.

உயர்ந்த விடயங்களை சாதிக்க வேண்டும் என குறிக்கோளை உடையவர்களாகவும் இருப்பவர்களும் இவர்கள் தான்.

இவர்கள் தோல்வியை பற்றி அதிகமாக பயப்படுவதே பல சமயங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றது.

ரிஷபம்

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் நிலையான தன்மையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள், வெளியில் பெரிய தைரியசாலி போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தோல்வி பற்றிய பயமுடையவர்களாக இருப்பார்கள்.

இதனாலேயே இவர்கள் புது விஷயங்களை கையாளமல் இருப்பர். ஆனால், இவர்களுக்குள்ளும் அவர்கள் பயப்படும் புது சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களை அறியாமலேயே அதிகமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியை சேர்ந்தவர்கள், எந்த விடயத்திம் பெறுப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களுக்கு இவர்களே போட்டியாளர் என சிந்தித்து சுயமாக முன்னேற வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள், அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.

இவர்கள் இப்படி இருப்பதை பார்க்கும் பலர், இவர்களை “லட்சியவாதி” என்ற பிரிவில் அடக்குவதுண்டு.

ஆனால் உண்மையில் இவர்கள் தோல்வி அடைந்து விட கூடாது என்ற எண்ணத்தாலேயே பொறுப்பாக இருக்கின்றனர். இவர்களுக்கு தோல்வி என்றாலே பயம் வந்துவிடுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *