இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு ரூ.20,000/- மாத வருமானம் கிடைக்கும்..!
அஞ்சல் அலுவலகம் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. இந்த வகையில் ஓய்வு பெற்ற நபர்களின் வருங்கால தேவையை பூர்த்தி செய்யும் விதமாக “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்” வாயிலாக மாத வருமானத்தை அஞ்சல் அலுவலகம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் ராணுவ வீரர்கள் 50 வயதுக்கு மேல் உள்ளவராகவும், வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் 55 வயதுக்கு மேல் உள்ளவராகவும், ஓய்வு பெற்றவர்கள் 60 வயதுக்கு மேல் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இதில் இணையும் நபர்கள் மாதந்தோறும் குறைந்தது 1000 ரூபாயை தனது தபால் கணக்கில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும் பயனர்கள் விரும்பினால் ரூ.30,00,000/- பணத்தை ஒரே தவணையாகவும் செலுத்தலாம். இவ்வாறு செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு அரசு சார்பாக 8.2% வட்டியாக வழங்கப்படும். அதாவது ஓர் ஆண்டுக்கு 2.46 லட்சம் ரூபாய் வீதம் ஒரு மாதத்திற்கு 20,000/- ரூபாய் வட்டியாக பயனர்களின் தபால் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த வட்டி தொகையானது பயனர் செலுத்தும் வைப்பு தொகையின் அளவை பொறுத்து மாறுபடும். இவ்வட்டி தொகை 03 மாதங்களுக்கு ஒரு முறை அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் வட்டி தொகையானது 1.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருப்பின் வரி விலகும் அளிக்கப்படும்.