எல்லாமே மாறப்போகுது.. இன்று முதல் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்..!
மார்ச் 1 ஆம் தேதி வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்தில் முடிவடைவதால் இந்த மாதம் மற்ற மாதங்களை விட முக்கியமானதாகும். மார்ச் மாதம் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு, ஜிஎஸ்டி என பல மாற்றங்கள் வர இருக்கிறது.
சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கும். கடந்த பிப் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்தது. விரைவில் தேர்தல் வர இருப்பதால் இந்த மாதம் சிலிண்டர் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
ஜிஎஸ்டி கட்டண ரூல்ஸ் :
மார்ச் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்கள் வருகின்றன. ரூ.5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது பி2பி பரிவர்த்தனைகளுக்கு (B2B Transactions) இ-இன்வாய்ஸ் (E-invoice) விவரங்களை கட்டாயமாக சேர்க்க வேண்டும்.இந்த விவரங்களை சேர்க்கவில்லை என்றால், இ-வே பில் (E-way Bill) உருவாக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகளின் கீழ் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதற்கும் இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள்
அரசாங்கம் சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப விதிகளை (IT Rules) மாற்றி உள்ளது. எக்ஸ் (X), பேஸ்புக் (Facebook), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தள (Social Media) செயலிகள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். மார்ச் மாதம் முதல் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் சமூக ஊடங்களில் செய்திகள் பரப்பப்பட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். சமூக ஊடக தளத்தை பாதுகாப்பான தளமாக மாற்றுவதே அரசாங்கத்தின் (Government) இந்த முயற்சியின் நோக்கமாகும்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு ரூல்ஸ்
எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான மினிமம் டே பில் சர்குலேஷன் ( Minimum Day Bill Calculation) செயல்முறையில் மாற்றங்கள் வருகிறது. இந்த விதிகள் மார்ச் 15ஆம் தேதி முதல் வருகின்றன. இது குறித்து கஸ்டமர்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.