மக்கள் அதிர்ச்சி..! நேற்று 101.48 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு..!
அக்னி நட்சத்திர காலம் ஆரம்பிக்க இன்னும் 2 மாதம் உள்ள நிலையில் தற்போது பல இடங்களில் அனலாய் தகிக்க ஆரம்பித்து விட்டது. காலை நேரங்களில் சுடும் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்க ஆரம்பித்து விட்டனர்.காலை 11 முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர். அனைவரும் வீட்டுக்குள்ளையே முடங்கி இருக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் வருவதற்கு முன்னே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது மக்களிடையேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு ஜூஸ், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.