இது தெரியுமா ? மணித்தக்காளியின் சாறை 48 நாட்கள் குடித்து வந்தால்…

கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.

கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

இத்தகைய மணத்தக்காளி 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. இப்போது அந்த மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போம்.

வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும். மலச்சிக்கல் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தொண்டை கரகரப்பு தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும். காசநோய் காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. கை கால் வலி காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

சரும அலர்ஜி சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.

சிறுநீர் கோளாறு சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள் அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். கல்லீரல் பிரச்சனைகள் மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும்.

நெஞ்சு வலி மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு, இதயமும் வலிமையடையும். வலிமையான விந்தணு முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.

மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம்.

நமது ஊர் பகுதிகளில் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு கீரை மணத்தக்காளி கீரையாகும். இது பல மருத்துவ குணங்களை அடக்கியுள்ளது. இன்று பலரையும் பாதிக்கக்கூடிய சில பிரச்சனைகளுக்கு இந்த மணத்தக்காளி கீரை எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பது பற்றி காணலாம்

மணத்தக்காளி காய் மணத்தக்காளி காயை, சுண்டக்காயை போல வற்றல் செய்து சாப்பிடலாம். இதனை குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இது சுவையான மருந்தாக அமைகிறது.

மூட்டு வீக்கம் :

மணித்தக்காளி கீரையை விளக்கெண்ணையில் வதக்கி பற்று போட்டால் மூட்டு வீக்கங்கள் குணமாகும்.

விரை வாதம் :

விரை வாதத்திற்கு மணித்தக்காளியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி பற்றாக உபயோகிக்கலாம். இதனை தினமும் உபயோகிப்பதால் விரை வாதம் குணமாக வாய்ப்புகள் உண்டு.

மணத்தக்காளியின் சாறு :

மணித்தக்காளியின் சாறை 5மிலி முதல் 10 மிலி வரை 48 நாட்கள் குடித்து வந்தால், ஈரலை பாதிக்கக்கூடிய அத்தனை நோய்களும் குணமடைந்துவிடும்

விதைகள் :

மணித்தக்காளியின் காய்ந்த விதைகளை ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வயிற்றுப்போக்கு குணமாகும்.

வாய்ப்புண்கள் :

மணித்தக்காளி கீரையை நன்றாக வதக்கி வாயிலே அடக்கி வைத்து, இதன் சாறை உள்ளே நன்றாக உறிஞ்சுவதால், வாய்ப்புண்கள் குணமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *