பிரதீப் ரங்கநாதனின் அடுத்து படம் இதுவா? இயக்குநர் குறித்து வெளியான தகவல்!
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதற்க்கு பின் அடுத்தடுத்து படங்களை எடுக்காமல் சிறிது காலம் பாஸ் மோடில் இருந்த பிரதீப், மீண்டும் ‘லவ் டுடே’ என்ற படத்துடன் களமிறங்கினார்.
ஏஜிஎஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவான்ஷாங்கர் ராஜா இசையமைத்தார். தானே ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவானா, ராதிகா , சத்யராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். 2k கிட்ஸின் இன்றைய காதல், சண்டை, ஊடல் இவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது.
100 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய இந்த படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தனர். இந்த படம் பிரதீப் ரங்கநாதனின் கேரியர் கிராப்பை உயர்த்தியது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் தனக்கு ஒரு கதை எழுதுமாறு அவர் கூறியதாக செய்திகளும் பரவியது. தற்போது ‘லவ் டுடே’ படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.
திரைவட்டாரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு மவுசு கூடியது என்றே கூறலாம். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக LIC, ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் மேலும் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி ‘ஓ மை கடவுளே’ மெகா ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தை இப்போது போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.