நடிகர் விஜய் சேதுபதியின் மகளா இது? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் தற்போதைய குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போதைய புது நடிகர்கள் ஹீரோ கதாபாத்திரத்திரத்தை தவிர மற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குகின்றனர்.
காரணம் நாம் ஆரம்பத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ அதே கதாபாத்திரத்தின் வாய்ப்பு தான் அடுத்த படங்களில் கிடைக்கும் என்பது தான்.
வில்லன் கதாபாத்திரத்தில் சினிமாவில் நுழைந்தால் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் இந்த எண்ணத்தை மாற்றியமைத்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் துணை நடிகர், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னனி நடிகராகவே வலம்வருகின்றார்.
தற்போது மகாராஜா, விடுதலை 2 படங்களில் நடிக்கிறார், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
குடும்ப புகைப்படம்
ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர். தற்போது சூர்யா சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார், அடுத்து அவரது மகள் நடிக்க வருவாரா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் அவரது மகள் ஸ்ரீஜா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.