முட்டை சாப்பிட்ட பின்பு இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம்! நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை சாப்பிட்ட பின்பு எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பால் தயிர் மோருடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
பொதுவாக பால் தயிர் மோருடன் அசைவ உணவான மீன் கருவாடு இவற்றினை சேர்த்து சாப்பிடக்கூடாது.
பால் பொருட்களுடன் கீரை வகைகளையும் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒருமணி நேரம் கழித்த பின்பு கீரைகளை சாப்பிடலாம்.
இதே போன்று முள்ளங்கி சாப்பிடுவதையும், எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய் போன்ற பழங்களையும் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் தோல் வியாதி ஏற்படுவதுடன், மூளை மந்தமாகவும் வாய்ப்பு உள்ளதாம்.
முட்டையுடன் சாப்பிடக்கூடாது?
முட்டை சாப்பிடட உடன் சர்க்கரை எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
அதே போன்று வாழைப்பழமும் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் முட்டையில் உள்ள புரதச்சத்து அனைத்தும் வெகுவாக மலக்குடலில் செல்வதற்கு வாழைப்பழம் வழி வகுக்கும். ஆதலால் முட்டையின் சத்து உடம்பிற்கு கிடைக்காமல் போகும்.
ஹொட்டல்களில் சென்று கறி, மீன் வறுவல்களை சாப்பிடுபவர்கள் அதனுடன் கொடுக்கப்படும், கேரட், கோஸ், வெள்ளரிக்காய், எலுமிச்சை உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
எண்ணெய் குளியல் பிறகு நிச்சயமாக அசைவ உணவுகளான கோழி, ஆடு, மீன் போன்ற உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பன்றி இறைச்சி மற்றும் பூசணி வெண்பூசணி இளநீர் குளிர்ச்சியான பொருட்களை தவிர்ப்பது நல்லது.