Apple Electric Car: எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் முயற்சியை கைவிட்ட ஆப்பிள்? இதுதான் காரணமா?

Apple Electric Car: மின்சார கார் தயாரிக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மின்சார கார் திட்டம் க்ளோஸ்?
ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ” ஆப்பிள் கார் ” திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த அறிவிப்பு அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவனத்தின் COO ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் திட்ட முதலாளி கெவின் லிஞ்ச் ஆகியோரின் சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் பணிபுரந்து வந்த 2,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், குழுவில் பல நூறு வடிவமைப்பாளர்கள் மற்றும் வன்பொருள் பொறியாளர்கள் இருப்பதால், பணிநீக்கங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

திட்டம் கைவிடப்பட காரணம் என்ன?
இந்த முடிவுக்கு ஒரு பெரிய காரணம், பிராண்டின் தயாரிப்புகள் வழக்கமாக அனுபவிக்கும் லாபத்துடன் ஒப்பிடும்போது, காருக்கான லாபம் குறைவாகவே இருக்கும் என கூறப்படுவதாகும். குறிப்பாக காரை சந்தைக்குக் கொண்டு வருவதற்கே இன்னும் பல மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் செலவிட வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கார் தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்தால், இந்திய சந்தையில் அதன் விலை சுமார் 1,00,000 அமெரிக்க டாலர்கள் அதாவது, ரூ. 83 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் காரின் உற்பத்தி பணியை தொடங்க அந்நிறுவனம் விரும்பவில்லை என தெரிகிறது.

10 ஆண்டுகால திட்டம்:
பின்னடைவுகள் மற்றும் தாமதங்களால் சிதைந்த ஒரு திட்டத்தை இதன்மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, லெவல் 5 (முழு) தன்னாட்சி ஓட்டத்துடன் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் குறைத்து, அதற்கு பதிலாக தற்போதைய தொழில்நுட்பத்தில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டி மிகவும் பொதுவான நிலை 2 அமைப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டது. காரின் அதிகாரப்பூர்வ படங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது முதல் வாகன தயாரிப்பின் வடிவமைப்பில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. இது திட்டத்தின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்பட்டது.

ப்ராஜெக்ட் டைட்டன் என்று அழைக்கப்பட்ட இந்த கார் மாடல், முதலில் லிமோசின்-பாணி இருக்கையுடன் கூடிய MPV-அளவிலான ஆட்டோமொனஸ் ஷட்டில் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் இது மிகவும் வழக்கமான வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டது மற்றும் மனிதக் கட்டுப்பாடுகளுடன் பொருத்தப்பட்டது. 2015ம் ஆண்டே இதுதொடர்பான தகவல்கள் வெளியானாலும், இந்த பிராண்ட் காருக்கான பிளாட்ஃபார்ம் அல்லது உற்பத்தி பங்குதாரரை அந்நிறுவனம் முறையாகப் பாதுகாக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் மிகப்பெரிய தடுமாற்றங்களில் ஒன்றாக கார் பிளாட்பார்ம் மாறியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *