2024 பஜாஜ் பல்சர் NS பைக்குகளின் ஆன் ரோடு விலை பட்டியல்
2024 பஜாஜ் பல்சர் என்எஸ் பைக்குகளில் விற்பனைக்கு உள்ள என்எஸ் 200, என்எஸ் 160, மற்றும் என்எஸ் 125 ஆகிய மூன்று மாடல்களின் சிறப்புகள் மற்றும் ஆன் ரோடு விலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
2024 ஆம் ஆண்டின் மூன்று மாடல்களின் ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்புடன் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளது.
2024 Bajaj Pulsar NS125
பஜாஜின் பல்சர் என்எஸ் வரிசையில் உள்ள குறைந்த விலை 125 என்எஸ் பைக்கில் 124.45cc ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் 8,500rpm-ல் 11.64 hp 8,500rpm-ல் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.
டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.
2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் விலை ரூ.1.13 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)
Bajaj Pulsar NS125
Engine Displacement (CC) 124.45 cc
Power (PS@rpm) 12 PS @ 8500 rpm
Torque (Nm@rpm) 11 Nm @ 7000 rpm
Gear Box 5 Speed
2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.26 லட்சம் வரை உள்ளது.
2024 Bajaj PULSAR NS160
பல்சர் என்எஸ் 160 பைக்கில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் 4 வால்வு பெற்று 9,000 rpm-ல் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் 7,250 rpm-ல் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலிலும் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS160 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.
2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக் மாடல் விலை ரூ.1.46 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)
Bajaj Pulsar NS160
Engine Displacement (CC) 160.3 cc
Power (PS@rpm) 17.2 PS @ 9000 rpm
Torque (Nm@rpm) 14.6 Nm @ 7200 rpm
Gear Box 5 Speed
2024 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.75 லட்சம் வரை உள்ளது.
ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற நேக்டூ ஸ்டீரிட் பல்சர் 200 என்எஸ் பைக்கில் 199.5சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 24 bhp மற்றும் 18.74 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இந்த பைக்கில் உள்ள 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று 100/80 – 17 டயர் முன்பக்கத்தில், பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பெற்று பல்சரின் NS200 மாடலில் டூயல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) உள்ளது.
2024 பஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் மாடல் விலை ரூ.1.57 லட்சம் (எக்ஸ்ஷோரூம் சென்னை)
Bajaj Pulsar NS200
Engine Displacement (CC) 199.5 cc
Power (PS@rpm) 24.5 PS @ 9250 rpm
Torque (Nm@rpm) 18.74 Nm @ 8000 rpm
Gear Box 6 Speed
2024 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1.88 லட்சம் வரை உள்ளது.