ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்தாரா இயக்குனர் பாலா.. படத்தை விட்டு விலக காரணம் இது தான் நடிகை மமிதா பைஜூ விளக்கம்!

இயக்குனர் பாலா, மலையாள நடிகை மமிதா பைஜுவை ‘வணங்கான்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தாக்கியதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தற்போது அந்த நடிகை அளித்துள்ள விளக்கம் வெளியாகி உள்ளது.

இயக்குனர் பாலா கடந்த 2022 ஆம் ஆண்டு, நடிகர் சூர்யாவை வைத்து இயக்குவதாக அறிவித்த திரைப்படம் ‘வணங்கான்’. இந்த படத்தை சூர்யாவே தன்னுடைய 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சுமார் ஒரு மாதம் வரை நடந்த நிலையில் திடீரென நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் பாலாவும், சூர்யா இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்றும், விரைவில் வேறு ஒரு நடிகரை வைத்து வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடரும் என அறிவித்தார்.

நடிகர் சூர்யா இப்படத்தை விட்டு வெளியேறிய உடனே, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ என்பவரும் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் இவர் அதிக டேக் வாங்கியதால், கடுப்பாகி நடிகை மமிதா பைஜுவை இயக்குனர் பாலா அடித்து விட்டதாக, சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவிய நிலையில், அடித்து பிடித்துக் கொண்டு நடிகை மமிதா பைஜூ விளக்கம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் க்ருய்து இவர் கூறியுள்ளதாவது… “நான் சொன்ன தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் நிறைய பேசினேன் ஆனால் அதில் கொஞ்சம் மட்டும்தான் வந்திருக்கிறது. ஆனால் நான் இதுபோன்ற அர்த்தத்துடன் பேசவில்லை. நான் பேசிய ஒரு வார்த்தைகளை மட்டும் வெளியிட்டு, அதனை சர்ச்சையாக மாற்றிவிட்டனர்.

உண்மையில் எனக்கு இயக்குனர் பாலாவுடன் எந்த ஒரு மோசமான அனுபவமும் கிடையாது. நான் அவருடன் ஒரு வருடத்திற்கு மேல் பயணித்துள்ளேன். நான் சென்னையில் இருந்த போது, என்னை இயக்குனர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டனர். இயக்குனர் குழுவினருடன் எனக்கு நல்ல பாண்ட் இருக்கிறது.

குறிப்பாக இயக்குனர் பாலா எனக்கு நிறைய ஃப்ரீடம் கொடுத்திருந்தார். இந்த பேட்டியில் இயக்குனர் பாலா குறித்து பல நல்ல விஷயங்களை பேசியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. பொதுவாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் பாலா மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக தான் இருப்பார். ஆனால் என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் சொல்வதை நடித்து கொடுத்துவிட்டால் அவர் மிகவும் ஸ்வீட்டாக தான் இருப்பார்.

இந்த படத்தில் இருந்து நான் விலக காரணம், மலையாளத்தில் எனக்கு இன்னொரு படம் நடிக்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக மட்டுமே, இப்படத்தில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

சூர்யாவை வைத்து இயக்கியபோது கைவிடப்பட்ட ‘வணங்கான்’ படத்தை, நடிகர் அருண் விஜய்யை வைத்து மீண்டும் இயக்கி முடித்துள்ளார் பாலா. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *