கால்வாசி நிதி மட்டும் ஒன்றிய அரசு வழங்கிவிட்டு அந்த திட்டத்திற்கு பெயர் மட்டும் ‘பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்’..!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது :பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் ஒன்றிய அரசு நிதி வழங்குகிறது. முக்கால்வாசி மாநில அரசு நிதியில் தான் அது நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆனால், அந்த திட்டத்திற்கு ‘பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்’ என பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகதான்.
பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தை பார்வையிடும் எம்.பி.க்கள் ‘இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை’ என கேள்வி எழுப்புகின்றனர்
திமுக காணாமல் போகும் என சொன்ன நிறைய பேரை பார்த்துள்ளேன். அவர்கள்தான் காணாமல் போயுள்ளார்கள். திமுக தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது
தூத்துக்குடி விழாவில் எனது பெயரை கூறுவதற்கு கூட பிரதமர் மோடிக்கு மனமில்லை என்பது தான் உண்மை.
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யவில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தே வெளிநடப்பு செய்தோம்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திட வேண்டும் என்ற கலைஞரின் கனவு இன்று நனவாகியுள்ளதுநாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என 2013ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதியிருந்தார். அதை தொடர்ந்து தொடர்ச்சியாக கனிமொழி நாடாளுமன்றத்தில் இதனை வலியுறுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.