ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங்.. ஜாம்நகரில் வழங்கப்பட்ட சிறப்பு காலை உணவு
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (01.03.2024) முதல் வரும் மார்ச் 3 ஆம் தேதி வரை இவர்களது ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது.
இதன் காராணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என கோலகாலமாக நடைபெற்று வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை பதிவு செய்ய ஏராளமான செய்தி ஊடகங்களும், செய்தியாளர்களும் ஜாம்நகரில் குவிந்துள்ளனர். எனவே ப்ரீ வெட்டிங்கின் முதல் நாளான இன்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு காலை உணவு வழக்கப்பட்டது.
குஜராத்தின் பாரம்பரிய உணவான அதில் சாண்ட்விச், பழங்கள், ஜிலேபி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி அடுத்தடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக அவர்களுக்கு குளிர் பானங்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ப்ரீ வெட்டிங்கில் பங்கேற்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்ஜ் ஜுக்கர்பெர்க், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிடோர் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.