16 வயதில் இருந்து… அப்பா கொடுத்த அந்த தொல்லை: மனம் திறந்த நடிகை குஷ்பு

தன்னுடைய தந்தையால் தனக்கு நேர்ந்த துன்பம் குறித்து தாமதமாக பேசியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை குஷ்பு.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு நடந்த மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், வாழ்க்கையில் அனைவருக்குமே மோசமான தருணங்கள் இருக்கும், அதை கடந்து தான் வந்திருப்பார்கள்.

ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட வேண்டிய சம உரிமைகள் மறுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஒரு பெண்ணை வக்கிர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை இழிவாக பேசினால் தான் சிறந்த ஆண்மகன் என நிரூபிக்க முடியும் என நினைக்கிறார்கள்.

அது கேவலமான புத்தி என அவர்களுக்கே புரியமறுக்கிறது, ஆனால் இப்போது காலம் மாறி வருகிறது, ஒரு பெண்ணை தவறாக பேசினால் 100 பேர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

நாம் கேவலமாக பேசிய நபரை பற்றி நினைக்க வேண்டாம், ஆதரவாக இருப்பவர்களை நினைத்து பார்ப்போம்.

எதிர்மறையான விடயங்களிலும் நேர்மறையானதை பார்ப்பதே சிறந்தது. எனக்கு 16 வயதிலிருந்து நான் என் தந்தையுடன் நெருங்கி பழகவில்லை, அதன்பின் அவரை நான் பார்க்கவே இல்லை.

இப்போது உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது, அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.

என் தந்தை என்னிடம் தவறாக நடந்து கொண்டது என் இதயத்தின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது, தினமும் காலையில் எழுந்ததும் எனக்கு தோன்றும், பாரமாக உணர்ந்தேன்.

ஆனால் இப்போது அப்படி இல்லை, நான் வெளியே சொல்லிவிட்டேன். என்னை போன்று பலரும் வெளியே கூறுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இதை செய்தேன்.

பெண்களே, உங்களுக்கு துயரம் நடந்தால் உடனே கூறிவிடுங்கள், கிட்டத்தட்ட 95 சதவிகித துன்புறுத்தல்கள் குடும்பத்திற்கு சம்மந்தப்பட்டவர்களால் தான் நிகழும், 5 சதவிகிதம் தான் வெளி ஆட்களால் என பேசியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *