அரசு வழங்கும் 35,000 ரூபாய்க்காக வேறொருவருடன் திருமணம் செய்த பெண்.., சிக்கியது எப்படி?
ரூ.35 ஆயிரம் அரசு பணத்திற்காக திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் சிக்கியுள்ளார்.
திருமண சட்டம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் திருமண சட்டம் மூலம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர் வரிசை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும்.
இதன்படி, ஜோடிகளுக்கு ரூ.51,000 வழங்கப்படும். இதில் ரூ.35,000 ரூபாயை நேரடியாக மணமகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மேலும், பரிசு பொருட்களாக ரூ.10 ஆயிரம் மற்றும் திருமண நிகழ்ச்சி செலவுக்காக ரூ.6 ஆயிரம் ஒதுக்கப்படும்.
இந்நிலையில், பிப்ரவரி 27 -ம் திகதி ஜான்சி நகரில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மோசடியில் ஈடுபட்ட பெண்
அந்த திருமண நிகழ்ச்சியில் குஷி என்ற மணமகளுக்கு, மத்திய பிரதேசத்தின் ரிஷ்வான் என்ற மணமகனுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, திருமண நேரத்தில் மணமகன் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது.
இதனால் அந்த மணப்பெண் அரசின் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று நினைத்து உறவுக்கார பையன் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அரசு வழங்கும் சீர்வரிசை பொருட்கள், பணம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, இவர் செய்த செய்த செயல் மோசடி என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அதிகாரி லலிதா யாதவ் கூறுகையில், “மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆதார் அட்டைகள் சரிபார்க்கப்படும். ஆனால், இந்த ஜோடிகளுக்கு சரிபார்க்கப்படவில்லை” என்றார்.
மேலும், மணமகள் குஷிக்கு வழங்கப்பட பொருட்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.