தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறந்தநாள் வாழ்த்து

மலையக மறுமலர்ச்சிக்கான பயணத்தின்போது இங்குவாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு தமிழக அரசும் முழுமையான ஒத்துழைப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வழங்கும் என உறுதியாக நம்புகின்றேன் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், தமிழ்மொழியைக் காப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் காலத்தின் கட்டாய தேவைகளாகும் எனவும் கூறியுள்ளார்.

வெற்றி பயணம்
மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளாவது,“ இன்று அகவை தினம் காணும் தமிழக முதல்வர் மதிப்புக்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் தேக ஆரோக்கயத்துடன் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்.

தமிழக மக்களால் மட்டுமல் அல்ல உலக வாழ் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வெற்றி பயணம் தொடரவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *