இன்று முதல் 6 மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்த ரஷ்யா..!
ரஷ்யாவில் பெட்ரோல் விலையை நிலையாக வைத்திருக்கும் நோக்கில் இன்று முதல் 6 மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இது வசந்தகால களப்பணிகள், விடுமுறை காலம் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் திட்டமிடப்பட்ட பழுதுபார்ப்பு போன்றவை காரணமாக பெட்ரோல் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக ரஷ்யா இருக்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருப்பதும் இந்த முடிவிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.