குட் நியூஸ்..! விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு அருமையான ஆஃபர்..!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக மாநகர பேருந்துகளின் தேவை அதிகமாகி இருக்கிறது. பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இதில் பல பிரச்சனைகளும் வருகின்றன. அதாவது வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், இரண்டு பஸ் மாற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதற்காக கூடுதல் செலவாகிறது என நிலையில் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையில் உள்ள எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டை மாநகரப் போக்குவரத்து கழக செயலின் மூலம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே கூடுதலாக 40 ரூபாய் செலுத்திக் கொள்ளலாம் என்றும் இதனால் காலவிரயம் இன்றி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம். மேலும் எந்த பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதன்படி கட்டணத்தில் இருந்து ரூ.40 கூடுதலாக செலுத்தினால், பயணிகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், கிளாம்பாக்கத்திற்கும் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..

இந்த திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *