ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்..!
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, குடோனில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.
போதைப் பொருள் கடத்தலுக்கு இவர் மூளையாக செயல்பட்டதும், இவருக்கு துணையாக இவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரும், அவரது சகோதரர்களும் தலைமறைவாகினர். தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.