இது தெரியுமா? பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிட்டால்…
இரவு சோறு அதிகமாகி மீதம் வந்துவிட்டால் கவலைப்படாமல் அச்சோறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கிளறி மூடி வைத்துவிடவும். (வெந்நீர் வேண்டாம். பச்சைத்தண்ணீர் போதும்)
அடுத்த நாள் காலையில் இதை தாராளமாக உண்ணலாம். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இச்சோற்றில் குடலுக்கு ஆரோய்க்கியம் தரும் நிறைய உயிர் சத்துகள் உள்ளன. அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
இச்சோற்றுடன் தொட்டுக்க நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எந்த கூட்டும் சாப்பிடலாம் என்றாலும் கிராமப்புறங்களில் கூட்டு இல்லை என்றால் பச்சை மிளகாயையோ, சின்ன உள்ளியை உப்புடன் சேர்த்தோ, மோர் சேர்த்தோ, அல்லது உப்பும் புளியும் கலவை செய்தோ சாப்பிடுவார்கள்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
உண்மையை சொல்லப்போனால், சாதத்தை விட, இந்த தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கினை இந்த பழைய சோறு தண்ணீர் வகிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், அலர்ஜியை போக்குகிறது. வயதான தோற்றத்தை தள்ளி போட செய்து, இளமையை தருகிறது. இந்த நீரை மட்டுமே, தலைக்கு கண்டிஷ்னராக பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறுவதுடன், முடி உதிர்வதும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பழைய சோறு சாப்பிடுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராதாம். மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும். ஆனால், பழைய சாதமாக நமக்கு கிடைக்க வேண்டுமானால், தண்ணீர் ஊற்றி 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியமாம்..
மூல நோய் உள்ளவர்கள், பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் மட்டும், டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை சாப்பிடக்கூடாது.