காலையில் அதிர்ச்சி செய்தி..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு..!
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூபாய் 47,520 விற்கப்படுகிறது.
அதே போல் வெள்ளி ஒரு கிராம் ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் ரூ.46,720-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.