சுக்கிரன் பெயர்ச்சி… வேலையில் தொழிலில் வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்

வாழ்க்கை சுகங்களை, ஆடம்பர வாழ்க்கையை, செல்வ செழிப்பை அள்ளித் தரும் சுக்கிர பகவான், மார்ச் 7ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் பெயர்ச்சியினால், ரிஷபம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. சுக்கிரன் பெயர்ச்சியினால், சில ராசிகள் அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்று, வேலையில் தொழிலில், நல்ல நிலையை அடைவார்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசிகளுக்கு, சுக்கிரன் பயிற்சி மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். வியாபாரத்தில், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் தொடர்பினால் ஆதாயம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் பெரிய வெற்றிகளை பெறலாம். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும்

கடக ராசி

கடக ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி, தடைகள் அனைத்தையும் நீக்கும். இதனால், திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். உறவினர்களின் ஆதரவு முன்னேற்றத்தை கொடுக்கும். ஆடம்பர வாழ்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய ஆதாரங்கள் மூலம் வருமானம் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சி, விருச்சிகலை கொண்டு வந்து சேர்க்கும். திட்டங்கள் அனைத்தும், உங்கள் விருப்பப்படி நிறைவேறும். ஆன்மீக விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.

துலாம் ராசி

துலாம் ராசிகளுக்கு, தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் அறிவுத்திறனால், திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியினர், வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பார்கள். பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். முதலீடுகளால் வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். வேலையில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *