கேது-குருவால் நவபஞ்சம் யோகம்: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
இன்னும் மூன்று மாதங்களில் மே மாதம் தொடங்கப் போகிறது. இந்த ,மாதம் குரு மற்றும் கேதுவின் சேர்க்கை நடந்து நவபஞ்சம் ராஜயோகம் உருவாகப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
நவபஞ்சம ராஜயோகம் 2024 : ஜோதிடத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நட்சத்திரகளின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஏதேனும் கிரகத்தின் ராசியை மாற்றம் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகிறது. இந்த வரிசையில் தற்போது வருகிற மே மாதம் நவபஞ்சம ராஜயோகம் உருவாகப் போகிறது.
கேது குரு சேர்க்கையால் மே மாதம் நவபஞ்சம யோகம் உண்டாகும் :
வேத ஜோதிடத்தின் படி, தற்போது கேது கன்னியில் பெயர்ச்சி அடைகிறார். அதேசயம் குரு அதன் சொந்த ராசியான மேஷத்தில் அமைந்திருக்கிறார். வருகிற மே 1 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குள் குரு பெயர்ச்சி அடையப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரங்கள் சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டில் சேர்க்கை உருவாகும். இதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தின் படி நவபஞ்சம ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். இருப்பினும் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட உண்டாகும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம்…
மிதுனம் (Gemini Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். மிதுன ராசி அரசியல்வாதிகளுக்கு நல்ல காலம் அமையும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். முதலீடு மூலம் பலன் கிடைக்கும். அபரிமிதமான செல்வம் பெருகும். கடன் தொல்லை நீங்கும். மூதாதையர் சொத்துக்களால் நிதிப் பலன் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறலாம்.
சிம்மம் (Leo Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் தரும். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். பணம் வரவு ஏற்படும். தடைபட்ட பணிகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். தொழிலிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். சட்ட விஷயங்களில் இதுவரை கிடைக்காத வெற்றி கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாகனம், அல்லது சொத்து வாங்கலாம். வெளியூருக்கு சுற்றுலா செல்லலாம்.
துலாம் (Libra Zodiac Sign) : கேது மற்றும் குருவின் சேர்க்கையால் உருவாகுப் போகும் நவபஞ்சம ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு ,லாபகரமான் பலனைத் தரும். வேலையில் டார்கெட்டை முடித்து வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், இதனால் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றி கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து போன்றவற்றை வாங்கலாம்.