மாருதி முதல் டாடா வரை.. இந்தியாவில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் கார்களில் லிஸ்ட்!
சமீப காலமாக மின்சார வாகனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருக்கிறது. இரு சக்கர வாகனத்தை போலவே கார்களிலும் மின்சார கார்களுக்கு வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் மின்சார கார்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களை தயாரித்து விற்கும் நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க தங்கள் போர்ட்ஃபோலியோக்களை புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் விரிவுபடுத்த தயாராகி வருகின்றன.
நடப்பாண்டில் ஏற்கனவே அடுத்தடுத்து பல புதிய மின்சார வாகன தயாரிப்புகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன. அந்த வகையில் நடப்பாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ள சில முக்கிய எலெக்ட்ரிக் கார்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
டாடா பஞ்ச் ஈவி (Tata Punch EV): டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது அதன் பஞ்ச் காம்பாக்ட் எஸ்யூ-வியை CNG வெர்ஷனில் அறிமுகப்படுத்திய பிறகு, சமீபத்தில் ரூ.11 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் தனது Punch EV-ஐ அறிமுகம் செய்துள்ளது. டாடா பஞ்ச் ஈவி-யானது பட்ஜெட்டுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் SUV-ஆக அறிகுகம் செய்யப்பட்டுள்ளது. மீடியம் மற்றும் லாங்-ரேஞ்ச் பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது. இதில் மிட்-ரேஞ்ச் வேரியன்ட் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை செல்லும். இதன் பிரீமியம் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.49 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): Maruti Suzuki eVX கான்செப்ட் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நிறுவனம் தனது eVX எலெக்ட்ரிக் எஸ்யூவி-யை நடப்பாண்டில் வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் eVX-ஆனது நிறுவனத்தின் கிராண்ட் விட்டாராவைப் போன்ற பரிமாணங்களைக் கொண்டுள்ளது. மாருதி சுசுகியின் இந்த EV 60 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் மற்றும் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 550 கிமீ என்ற ஈர்க்கக்கூடிய தூரத்தை மைலேஜாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BYD Seal EV: சீனாவை சேர்ந்த EV உற்பத்தி நிறுவனமான BYD நடப்பாண்டின் மத்தியில் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் செடானான Seal-ஐ அறிமுகப்படுத்த உள்ளது .நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0 அடிப்படையில், வரவிருக்கும் இந்த கார் 2 பேட்டரி ஆப்ஷன்களை வழங்க கூடும். இதில் பெரிய யூனிட் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 700 கிமீ வரை செல்ல கூடிய மைலேஜை பெற கூடும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஈவி (Mahindra XUV300 EV): மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV300 EV-ஐ அடுத்து வரும் சில மாதங்களில் களமிறக்க தயாராகி வருவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டியை தீவிரப்படுத்த தயாராகி வருகிறது. இதில் 35 kWh பேட்டரி பேக் மற்றும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டால் ஈர்க்கப்பட்ட டிசைனிங் எலெமென்ட்ஸ் உள்ளன. இந்த காரின் விரிவான விவரக்குறிப்புகள் பற்றிய உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்றாலும், XUV300 EV-ஆனது மலிவு விலையில் கிடைக்க கூடிய செயல்திறன் மிக்க வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): மஹிந்திராவின் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மின்சார வாகன வரிசையின் ஒரு பகுதியாக, XUV.e8 எலெக்ட்ரிக் SUV-ஆனது 80 kWh பேட்டரி, ஆல்-வீல்-டிரைவ் திறன் மற்றும் 2 பவர் அவுட்புட்ஸ்களை பெறும் என கூறப்படுகிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிமீ வரை செல்லும் மைலேஜை கொண்டிருக்க கூடும்.
டாடா ஹாரியர்/சஃபாரி ஈவி-க்கள் : டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது அதன் எலெக்ட்ரிக் பேஸஞ்சர் வெஹிகிள் லைன்-அப்பை ஹாரியர் ஈவி மற்றும் சஃபாரி ஈவி-க்களுடன் விரிவுபடுத்த உள்ளது. இதில் மல்டிபிள் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்படலாம். டாடாவின் EV பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஹாரியர் EV-யானது 500 கிமீ தூரம் வரை மைலேஜை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படலாம்.
டாடா கர்வ் (Tata Curvv): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் எலெக்ட்ரிக் கார்களில் இது முக்கியமான மாடலாகும். இதனிடையே டாடாவின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யான Curvv சமீபத்தில் பாரத் மொபிலிட்டி ஷோவில் டீசல் வெர்ஷனில் காட்சிப்படுத்தப்பட்டது. டாடா மோட்டார்ஸின் நான்காவது எலெக்ட்ரிக் காராக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இது வெளியாக கூடும். இந்த கார் 400-500 கிமீ ரேஞ்சை அளிக்கும் வகையில் ஒரு பெரிய பேட்டரி பேக் மற்றும் ஆல்-வீல் டிரைவிற்கான டூயல்-மோட்டார் அமைப்புடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.