14 ஆப்ஷன்களில் அறிமுகமாக உள்ள 2024 டாடா நெக்ஸான் டார்க் எடிஷன்… வெளியான தகவல்

டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி செக்மென்ட்டில் டார்க் எடிஷன் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்களின் விற்பனையில் இந்த டார்க் எடிஷன்கள் 15% முதல் 40% வரை பங்களிக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரி-க்கள் ஏற்கனவே டார்க் எடிஷன் வேரியன்ட்ஸ்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், Nexon-ன் 2024 டார்க் எடிஷன் விரைவில் (மார்ச் 2024-ல்) இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. பிரீமியம் எஸ்யூவி-ஆன 2024 டாடா நெக்ஸான் டார்க் எடிஷன் அறிமுகமானால் கியா சோனட் எக்ஸ் லைன் மற்றும் ஹூண்டாய் வென்யூ என் லைன் போன்ற சில பிரபலமான கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது தனது நெக்ஸான் எஸ்யூவி-யின் டார்க் எடிஷனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய போது அதன் நேர்த்தியான, டார்க்-பேக் எக்ஸ்டீரியர் இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிக பிரபலமானது. இதனிடையே Moton Arena India தனது அதிகாரப்பூர்வ X பிளாட்ஃபார்மில் வெளியிட்ட போஸ்ட்டில் புத்தம்-புதிய நெக்ஸான் வாகனமானது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய 2 எஞ்சின் ஆப்ஷன்களிலும் பல்வேறு கான்ஃபிகரேஷன்களை உள்ளடக்கிய 14 வேரியன்ட்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின்படி டாடா நெக்ஸானின் புதிய டார்க் எடிஷனின் பெட்ரோல் ட்ரிம் எட்டு வெவ்வேறு மாடல்களிலும், டீசல் ட்ரிம் டிரான்ஸ்மிஷன்களின் அடிப்படையில் 6 ஆப்ஷன்களையும் பெறும் என தெரிகிறது.

இந்த அனைத்து வேரியன்ட்ஸ்களும் பளபளப்பான அட்லஸ் பிளாக் எக்ஸ்டீரியர் ஷேட்-உடன் வருகின்றன. சுவாரஸ்யமாக ப்யூர் மற்றும் ஸ்மார்ட் ட்ரிம் லெவல்ஸ்களுக்கு டார்க் எடிஷன் ஃபினிஷ் கிடைக்காது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் இந்த எஸ்யூவி-யின் EV வேரியன்ட் காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்து அடுத்த டாடா நெக்ஸான் டார்க் எடிஷன் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. புதிய ஐசிடி மாடல் அட்லஸ் பிளாக் மோனோக்ரோமடிக் பெயின்ட் மற்றும் மேட்சிங் ரூஃப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் 2024 நெக்ஸான் காரில் 5-ஸ்போக் கன் மெட்டல் கிரே அலாய் வீல்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ரூஃப் ரெய்ல்ஸ் அதே கிரே ஷேட்-ல் இருக்கும். அதே போல முந்தைய வேரியன்ட்ஸ்களை போலன்றி, டார்க் எடிஷன் பேட்ஜானது ஃப்ரன்ட் ஃபெண்டர்ஸ் மற்றும் ரியர் டெயில்கேட் ஆகிய இரண்டிலும் வைக்கப்படும். இது லேட்டஸ்ட் 2024 Tata Nexon Dark Edition-ன் தோற்றத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுகிறது.

புதிய நெக்ஸான் டார்க் எடிஷனின் கேபினை பொறுத்தவரை டேஷ்போர்ட், டோர் பேனல்ஸ், ஸ்டீயரிங் வீல் மற்றும் ரூஃப் லைனர்ஸ் உள்ளிட்டவற்றின் ஷேடிற்கு ஏற்றவாரான டார்க் இன்டீரியரை கொண்டிருக்கும். இதன் எஞ்சின் கான்ஃபிகரேஷன் மாறாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் டார்க் எடிஷனானது சிறந்த ஆன்-ரோடு செயல்திறனை வழங்கும் வகையில் 1.2லி 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அல்லது 1.5லி 4-சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2024 நெக்ஸான் டார்க் எடிஷனின் விலையை இன்னும் வெளியிடவில்லை. ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலை வரம்பில் வரும் முந்தைய மாடல்களை விட வரவிருக்கும் எடிஷனின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *