“ஆனந்த் என் தந்தையை நினைவுப்படுத்துகிறார்..” மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் முகேஷ் அம்பானி உருக்கம்..
குஜராத்தின் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன் ப்ரீ வெட்டிங் விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த விழா மார்ச் 3 வரை நடைபெற உள்ளது. திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், சர்வதேச பிரபலங்கள் என குஜராத்திற்கு படையெடுத்துள்ளனர்., இந்த விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது சிறப்பு விருந்தினர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் ஆனந்த் தனது தந்தை திருபாயை நினைவுபடுத்தியதாக கூறினார். திருபாய் அம்பானிக்கும் ஆனந்த் அம்பானிக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து முகேஷ் அம்பானி விளக்கினார். அப்போது பேசிய அவர் “ திருபாய் அம்பானி ஜூலை 2002 இல் காலமானார்.” சமஸ்கிருதத்தில் அனந்த் என்றால் ‘முடிவு இல்லாதது’ என்று பொருள், எல்லையற்றது என்று பொருள். நான் அனந்த் அம்பானியிடம் எல்லையற்ற ஆற்றலைப் பார்க்கிறேன். நான் ஆனந்தைப் பார்க்கும்போதெல்லாம், என் தந்தை திருபாயை அவரில் காண்கிறேன். தன்னல் எதையும் செய்ய முடியும், செய்யமுடியாதது என்று எதுவுமில்லை என்பது என் தந்தை திருபாய் அம்பானியின் மனப்பான்மை, அப்படியே ஆனந்திடம் உள்ளது.
ஆனந்த் அம்பானி சிறந்த வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடுத்துள்ளார். அபரிமிதமான படைப்பு ஆற்றலின் நீர்த்தேக்கம், அவர் அன்பு மற்றும் அக்கறையின் அமைதியான ஊற்று.. ஆனந்த் மற்றும் ராதிகா, ராதிகா மற்றும் ஆனந்த் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி” என்று முகேஷ் அம்பானி கூறினார்.கூறினார்.
ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்திய பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானி – நீதா அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்சண்டிற்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆனந்த் – ராதிகாவின் ப்ரீ வெட்டிங் விழா நேற்று குஜராத்தில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட், ரன்பீர், அர்ஜுன் கபூர், அட்லீ மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பல பிரபலங்களி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். பிரபல பாப் பாடகி ரிஹானா மற்றும் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் டேவிட் பிளேன் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி மும்பையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் சுமார் 1,000 பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.