ஒரே வருடத்தில் 86% உயர்வு.. ஹீரோ மோட்டார்கார்ப் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷனின் வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து அதன் பங்கும் உயர்வு கண்டுள்ளது. ஓராண்டில் இந்த பங்கின் மதிப்பு 86 சதவீதம் அதிகரித்துள்ளது.

வாகன விற்பனையில் உச்சம்: ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் மார்ச் 2ஆம் தேதியான 1.56 சதவீதம் அதிகரித்து 4,577.45 ரூபாய் என பங்குச்சந்தையில் வர்த்தகமானது.

தேதியான இன்று 1.56 சதவீதம் அதிகரித்து 4,577.45 ரூபாய் என பங்குச்சந்தையில் வர்த்தகமானது.

பங்குகளின் விலை உயர்வுக்கு வாகன விற்பனை தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பே காரணமாகும். மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹீரோ மோட்டார் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,68,410 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இதுவே 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் 3,94,460ஆக இருந்தது. ஓராண்டில் வாகன விற்பனை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்த நிறுவன, 4,33,598 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

வாகன ஏற்றுமதியும் உயர்வு: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12,143 வாகனங்களை ஏற்றுமதி செய்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 23,153 ஆக உயர்ந்துள்ளது.

51% உயர்ந்த வருமானம்: ஹீரோ மோட்டாரின் வருமானமும் ஓராண்டு காலத்தில் 51 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது நிறுவனத்தின் வருமானம் 711 கோடி ரூபாயில் இருந்து 1073 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

இதை போலவே பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகளும் ஓராண்டில் 87 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது 4,581 என்ற அளவில் இது வர்த்தகமாகிறது.

இதனிடையே நுவாமா தரகு நிறுவனம் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற குறியீட்டிலேயே வைத்துள்ளது. குறிப்பாக பங்கின் மதிப்பானது 5,600 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களில் கவனம்: ஹீரோ மோட்டார் கார்ப் பங்குகள் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே வேளையில் ஹீரோ மோட்டார் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் X440 மற்றும் மேவரிக் 440 ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

மேலும் மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் முனைப்பு காட்டி வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் புதிதாக நான்கு மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் அதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கான சார்ஜர் நிலையங்களை அமைக்கவும் ஏதெர் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *