Rihanna: அம்பானி வீட்டில் ஒரு நாள் பாட இவ்வளவு சம்பளமா.. அடேங்கப்பா..!!
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
பிரபல தொழில் அதிபர் வீரென் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்டை ஆனந்த் அம்பானி ஜூலையில் திருமணம் செய்ய உள்ளார்.
அதற்கு முன்னதாக அம்பானி குடும்பத்தார் வெகு விமரிசையாக திருமண முன்வைபோக நிகழ்ச்சிகளை குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரையில் 3 நாட்கள் மிகவும் பிராம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாரூக் கான், ஜான்வி கபூர், ரன்வீர் கபூர், ஆலியா பட், அர்ஜுன் கபூர் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
திருமண முன்வைபோக நிகழ்ச்சிகளில் அர்ஜித் சிங், பிரீதம், பி ப்ராக், தில்ஜித் தோசாஞ், ஹரிஹரன், அஜய்-அதுல் ஆகிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த வரிசையில் முக்கியமாக பிரபல பாப் ஸ்டார் ரிஹானாவும் பாட உள்ளார். உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் பாடகி ரிஹானா.
இதனிடையே ராபியின் ரிஹானா ஜாம்நகருக்கு வியாழக்கிழமையன்று விமானத்தின் மூலம் வந்தடைந்தார். இந்த விடியோ சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகியுள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் பாடுவதற்கு பார்பேடியன் பாடகி, தொழிலதிபர் மற்றும் நடிகையான ரிஹானா பெரும் தொகையை வாங்கியுள்ளார்.
ரிஹானா ஒரு ப்ரைவேட் நிகழ்ச்சி நடத்தவும், கலந்துக்கொள்ளவும் ரூ.12 கோடி ($1.5 மில்லியன்) முதல் ரூ.66 கோடி ($12 மில்லியன்) வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே பெரும் பணக்காரர், இப்படியிருக்கும் அப் அண்ட் டவுன் பிளைட் செலவு முதல், ஹோட்டல், உணவு, பாதுகாப்பு, ரிஹானா-வுக்கான கட்டணம் ஆகிய அனைத்தையும் சேர்த்து குறைந்தது 80 கோடி ரூபாய் செலவு செய்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரும் பிரமாண்டமான விழாக்களுக்காக இந்தியா வந்துள்ளனர். இந்திய கோடீஸ்வரர்கள் கௌதம் அதானி, குமாரமங்கலம் பிர்லா ஆகியோரும் விருந்தினர்கள் பட்டியலில் உள்ளனர்.
பிரபல அமெரிக்க மந்திரதியான டேவிட் பிளேனும் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் தனது அற்புதமான மந்திர தந்திரங்களை செய்து காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமண முன்வைபோகங்களில் ஏராளமான விருந்தினர்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.
விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்காகவும் பிரத்யேக டிரஸ் கோட் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான விலை உயர்ந்த ஆடைகள் விருந்தினர்களுக்காகத் தருவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜாம்நகரில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியும், ஆனந்த் அம்பானியும் கிராம மக்களுக்கு தங்கள் கைகளால் உணவுகளை பரிமாறினர். கிராம மக்களின் ஆசியைப் பெறுவதற்காக இந்த அன்னதானம் நடத்தப்பட்டது.