காலணிகள் அழுக்காகி விடும்! பிரபல இசைக்கலைஞரை தூக்கி சென்ற பாதுகாவலர்கள்
காலணிகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக இசைக்கலைஞர் ஒருவரை இரு பாதுகாவலர்கள் சேர்ந்து தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இசைக்கலைஞர்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசை கலைஞர் கலீத் முகம்மது காலித் (48). இவர், ஆல்பம் பாடல்களை தயாரித்து வருகிறார். மேலும், பிரபலமான இசை நிறுவனத்திற்கு பாடல்களை பதிவு செய்தும் கொடுத்து வருகிறார்.
இவர் அண்மையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சவுத் பீச் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.
அப்போது காரில் வந்து இறங்கிய இசை கலைஞர், தனது காலணிகள் அழுக்காகி விடும் என்பதால் பாதுகாவலரை தூக்கி செல்லுமாறு கேட்டுள்ளார்.
அதனால், இரு பாதுகாவலர்கள் சேர்ந்து அவரை தூக்கி வண்டியின் பின்புறத்தில் ஏற்றி கச்சேரி நடைபெறும் மேடைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளமான இன்ஸ்ட்டாகிராமில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ சுமார் 29 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.