பிரித்தானியா செல்லக் காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : விசா நடைமுறைகளில் மாற்றம்
பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கனடா – பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன.
இதனால் அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டப்பூர்வ குடியேற்றவாசி
இந்நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நடவடிக்ககை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றன.
கடந்த ஆண்டு, நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது.
இது, இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.