வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் குங்குமப்பூ; பயன்படுத்துவது எப்படி?
கோடைகாலம் வந்துவிட்டால் வெயிலோடு சேர்ந்து ஒரு பயமும் வந்து விடும்.
கோடைகாலம் ஆரம்பமாகி அதிகப்படியான வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
கோடை காலங்களில் பெண்கள், ஆண்கள் என இரு பாலரும் சரும பாதிப்புக்களால் ஏற்படும் பிரச்சனைகளை யோசித்துக் கொண்டு இருப்பார்கள்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக சரும பாதிப்பும் அடிக்கடி ஏற்படும். அந்தவகையில் வெயிற் காலத்தில் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.
குங்குமப் பூவில் உள்ள நன்மைகள்
குங்குமப் பூவில் எண்ணற்ற ஆரோக்கியமான நன்மைகள் காணப்படுகின்றது. புற்றுநோய் உட்பட பிற நோய்களை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
மாரடைப்பு வராமல் இருக்கும்.
பக்கவாதத்தை தடுக்கிறது.
மன அழுத்தம் குறையும்.
உடல் எடையை இழக்க உதவும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்.
நரம்பு மண்டல சேதத்தையும் தடுக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
சருமத்தை பொலிவாக வைத்திருக்கும்.
சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்?
தேன் மற்றும் தயிருடன் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் மெதுவாக தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.
குங்குமப்பூவை இரவு முழுவதும் ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்து, முக டோனராகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் ஏற்படும் துளைகளை தடுக்கும்.
குங்குமப்பூ கலந்த எண்ணெயை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து மெதுவாக சருமத்தில் மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் இரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்.