அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்…!
பொதுவாகவே அனைவரும் செழிப்பான முடி வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
முறையான எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை அடையலாம்.
தலைமுடி வளர்ச்சியை தூண்டும் பல வகையான எண்ணெய்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
அவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் எண்ணெயில் பல நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தி எப்படி நீளமான மற்றும் அடர்த்தியான முடியை வளர செய்யலாம் என பார்க்கலாம்.
நீளமாக முடி வளர என்ன செய்யலாம்?
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் புதிதாக எடுத்த கற்றாழை ஜெல் எடுக்க வேண்டும். அடுத்து ஒரு தேக்கரண்டி பூண்டு சாறு மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து நேரடியாக தலை முடிக்கு பூசலாம்.
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், ஒரு முட்டை மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை கலக்கவும். சூடாக்கி முடிக்கு தடவ வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து கழுவவும்.
1 திராட்சைப்பழத்தை எடுத்து அரைத்துக்கொள்ளவும். பின் 100 மில்லி சூடான நீரை ஊற்றி கலக்கவும். ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விடவும். மறுநாள் வடிகட்டி மற்றும் 15 நிமிடங்கள் கழுவிய பின் முடிக்கு பூசலாம்.
1 முட்டை, ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்துக்கொள்ளவும். பின் முடிக்கு தடவலாம்.