கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வில்லி மற்றும் கதாநாயகியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமாருக்கும் தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ்க்கும் நேற்றய தினம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
வரலட்சுமி சரத்குமார்
இவர் 2012 ம் ஆண்டு சிம்புவிற்கு ஜோடியாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக கலக்கிய திரைப்படங்கள் இருக்க வில்லியாகவும் நடித்திருக்கிறார்.
இவர் தன்னை முன்னிலை படுத்தக்கூடிய தனக்கேற்ற கதாபாத்தரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் வரலட்சுமி.
இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சார்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ், இருவருக்கும் நேற்றைய தினம் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.