Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 03, 2024 – ஞாயிற்றுக்கிழமை

மேஷம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் நிரம்பி இருக்கும். உங்கள் பணி வாழ்க்கையில் வளர்ச்சி காத்திருக்கிறது. நீங்கள் வெற்றி அடைய கூடும் என்றாலும் உங்கள் எதிரிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். தடைகளைக் கடந்து பயணம் செய்யுங்கள்.

ரிஷபம்:

நீங்கள் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஏற்கனவே உள்ள உறவை பலப்படுத்திக் கொள்ளலாம். உங்களிடம் நேர்மறை ஆற்றல் மேலோங்கும். உங்கள் தொழில் சார்ந்து பொருளாதார வெற்றிகளை அடைவீர்கள். இதனால் முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்:

உங்கள் காதல் உறவில் சுமூகமான உரையாடல் மிக அவசியம். எல்லோரிடமும் நீங்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்பு உங்களை தேடி வரும். புதிய இடங்களுக்கு நீங்கள் பயணம் செய்யலாம். அதே சமயம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளை தவிர்க்கவும்.

கடகம்:

காதல் மற்றும் பலமான பந்தம் குறித்த உங்கள் தேடல் மேலோங்கும். இயல்பான வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து நம்பிக்கை கொண்டு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பயணங்களின் மூலமாக புதிய நபர்களை சந்திப்பீர்கள் மற்றும் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். அவை உங்களுக்கு பலன் கொடுப்பதாக அமையும்.

சிம்மம்:

நீங்கள் சாதனை செய்வீர்கள் மற்றும் உங்களுக்கான வளம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மலரும். உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக உரையாட வேண்டும். எதிர்பாராத வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பயணங்களின் மூலம் பணி சார்ந்த பலன்கள் கிடைக்கும்.

கன்னி:

காதல் உறவில் நல்லிணக்கம் மிகுந்த சூழலை நோக்கி நகர்ந்து செல்கிறீர்கள். இரண்டு நபர்களுக்கு இடையிலான மோதலில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டி இருக்கும். உங்கள் முந்தைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகள் உங்களுக்கு பலன் தருவதாக அமையும்.

துலாம்:

சுய அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு மன அமைதியை தருகின்ற ஆன்மீக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். உங்கள் மனதில் நிதி பாதுகாப்பு மேலோங்கும். உங்கள் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து புதிய சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

நட்புகளை ஊக்கப்படுத்த நீங்கள் மாபெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பணி சார்ந்த விஷயங்களில் புதிய வழிகாட்டிகளின் ஆலோசனையை கேட்கலாம். அது உங்களுக்கு வெற்றிக்கு வழிவகை செய்யும் மற்றும் அறிவை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

தனுசு:

உங்கள் அன்புக்குரியவர்களுடன் மனப்பூர்வமான பந்தத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் உங்கள் உரையாடல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். வெற்றி அடைய வேண்டுமென்றால் புதிய வாய்ப்புகளை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி உங்கள் ஆறாம் அறிவை பயன்படுத்துங்கள்.

மகரம்:

புதிய காதல் தொடர்பை உருவாக்கிக் கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள். இயல்பாக உங்களுக்கு பொருந்தக்கூடிய நபரின் திறன்கள் குறித்து நம்பிக்கை வையுங்கள். தொழில்முறை வல்லுனர்களின் ஆலோசனையை பெறலாம். சந்தேகம் உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை கொடுக்கும்.

கும்பம்:

காதல் உறவுகளில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நீங்கள் வெற்றி அடைய முடியும் என்றாலும் உங்கள் திறன்கள் குறித்து சந்தேகம் வரக்கூடும். சுய அக்கறை குறித்து நீங்கள் அலட்சியம் செய்து வருகிறீர்கள். அதை கவனத்தில் கொள்ளுங்கள். சுற்றுலா பயணம் புத்துணர்ச்சியை தரும்.

மீனம்:

நீங்கள் காதல் கனவில் மிதந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தொழில் சார்ந்து பிரச்சனைகள் வரக்கூடும். அதனை எதிர்கொண்டு வெற்றியடைய பிறருடைய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தேவைப்படும். தடைகளை கடந்து வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் உங்கள் ஆழ்மன பலத்தை பயன்படுத்த வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *