சென்னையில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்..!
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.03) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.