சூரியன் ராகு இணைவு… பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்க போகும் சில ராசிகள்
Sun Transit & Sun Rahu Conjunction Effects: ஜோதிடத்தில், சூரிய பகவானுக்கும் ராகு கிரகத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் செயற்கைகளும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சூரியன் பெயர்ச்சியினால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சவால்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சூரியன் பெயர்ச்சி (Sun Transit)
மார்ச் மாதம் 14ஆம் தேதி, சூரியன் பெயர்ச்சியாக உள்ள நிலையில், சூரியன் மீன ராசிக்கு செல்கிறார். மீனத்தில் ஏற்கனவே ராகு பகவான் வீற்றிருக்கும் நிலையில், இரு கிரகங்களும் இணைகிறார்கள். இந்த இரு கிரகணங்களின் சேர்க்கையால் கிரகணயோகமும் உருவாகப் போகிறது. இதனால் சில ராசிக்காரர்கள், பங்குனி மாதத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்நிலையில் பங்குனி மாதம், எந்தெந்த ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி (Leo zodiac sign)
சூரியன் பெயர்ச்சியினால், மீனத்தில் ராகுவும் சூரியனும் இணைவது சிம்ம ராசிகளுக்கு கெடுபலன்களை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும். நிதி நிலைமை பாதிக்கப்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். வேலையிலும் சக ஊழியர்களுடன் அதிருப்தி நிலவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
துலாம் ராசி (Libra zodiac sign)
சூரியன் ராகு சேர்க்கை துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் உருவாகிறது. இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். தோல்விகளால் மனம் பாதிக்கப்படும். இழப்பும் ஏற்படலாம். குடும்பத்திலும் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். முதலீட்டிலும் பெரிதாக வருமானம் ஏதும் வராது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கும்ப ராசி (Aquarius zodiac sign)
கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் ராகு இணையும் பங்குனி மாதம், சவால்களும் பிரச்சனைகளும் நிறைந்த மாதமாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனை ஏற்படலாம். வேலை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். நிதிநிலைமை பாதிக்கப்படக்கூடும். சமூகத்தில் உங்கள் கௌரவம் பாதிக்கப்படலாம். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல், மனதில் சோர்வு ஏற்படும்.