பாஜக முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர்: யார் அந்த டாக்டர் அப்துல் சலாம்?

BJP Lok Sabha Candidate List: நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, பாரதிய ஜனதா கட்சி, மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனன. இதில் எதிர்பார்க்கப்பட்ட பல பெயர்களை காண முடிகின்றது. சில பிரபல நபர்களின் தொகுதிகள் பறிக்கப்பட்டுள்ளதோடு, சில புதிய நபர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் ஆச்சரியங்களுக்கும் பஞ்சமில்லை. இதில் பலரை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒரு பெயர் கேரளாவின் மலப்புரம் தொகுதியின் வேட்பாளர் பெயராகும். அந்த தொகுதியில் பாஜக, டாக்டர் எம் அப்துல் சலாமை (Doctor M Abdul Salam) வேட்பாளராக்கியுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற பிரபல முகங்களும் புறக்கணிக்கப்பட்டது கூடுதல் வியப்பை அளிக்கின்றது. அனைத்திற்கும் மேலாக, டாக்டர் அப்துல் சலாமை முதல் பட்டியலிலேயே தனது வேட்பாளராக பாஜக அறிவிக்க காரணம் என்ன? யார் இந்த டாக்டர் அப்துல் சலாம்? இவரை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பல்கலைக்கழகத்தின் கிழக்கு துணைவேந்தராக இருந்த டாக்டர் அப்துல் சலாம்

கேரளாவின் (Kerala) மலப்புரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள டாக்டர் எம் அப்துல் சலாம் பல்கழைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்துள்ளார். அவர் 2011 முதல் 2015 வரை கேரளாவில் உள்ள திரூரில் உள்ள காலிகட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். அவர் பிரபலமான கல்வியாளர், பேராசிரியர், நிர்வாகி மற்றும் தர ஆலோசகராக அறியப்படுகிறார். அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகு, டாக்டர் சலாம் தனியார் கல்விக் குழுவான PACE-ல் சேர்ந்தார். இதில் குழுமத்திற்கு இந்தியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன.

மலப்புரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியுடும் வேட்பாளர்

2021 கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக அவரை மலப்புரம் (Malappuram) தொகுதியில் நிறுத்தியதாக சமூக ஊடகங்களில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றான. ஆனால், அப்போது அவர் வெற்றி பெறவில்லை. எனினும், அந்த தேர்தல்களின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவருக்கென்று ஒரு அடையாளம் உருவானது. கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் இரு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். எனினும், கட்சி அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

பாஜக -வின் இந்த முடிவின் பின்னால் உள்ள காரணம் என்ன?

டாக்டர் சலாம் மீது பாஜக (BJP) வைத்துள்ள அதிகப்படியான நம்பிக்கையே கட்சியின் இந்த முடிவின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. இதற்கு மற்றொரு காரணமாக கட்சியின் ஒரு நிர்பந்தமும் உள்ளது. இந்த தொகுதியில் முஸ்லீம் ஆதிக்கம் உள்ளது. முஸ்லிம்களின் மக்கள்தொகை இங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் வேட்பாளர்களே வெற்றிபெற இதுவே காரணம். ஆகையால், இந்த தொகுதியில் வெற்றிபெற நம்பிக்கைக்குரிய ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்துவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வழியில்லை. ஆனால், அந்த இடத்திற்கு சரியாக பொருந்தும் நம்பகமான ஒரு வேட்பாளர் பாஜக இடம் இருப்பதும் அந்த கட்சிக்கு ஒரு நல்ல விஷயமாகத்தான் பார்க்கப்படுகின்றது.

முஸ்லீம் லீக்கின் கோட்டை

இந்த தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோட்டையாகவும் பார்க்கப்படுகின்றது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐயுஎம்எல் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐயுஎம்எல் கட்சியின் பிகே குஞ்சல்குட்டி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது மரணத்திற்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது, அதில் மீண்டும் முஸ்லீம் லீக் வேட்பாளர் எம்பி அப்துஸ் சமத் சமதானி வெற்றி பெற்றார். அப்போது அந்த தேர்தலில் பாஜகவின் ஏ.பி.அப்துல்லாகுட்டி மூன்றாவது இடத்தில் இருந்தார். இப்போது வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Election) பாஜக மிகுந்த நம்பிகையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் டாக்டர் எம் அப்துல் சலாமை களமிறக்கியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *