மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச்சில் மெகா அறிவிப்பு: வங்கிக்கணக்கில் பம்பர் வரவு

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. அவர்கள் காத்திருக்கும் நல்ல செய்தி இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு கிடைக்கப் போகின்றது. ஹோலி பண்டிகையை ஒட்டி மத்திய அரசாங்கம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசாங்கம்

இதைப் பற்றி மத்திய அரசாங்கத்தின் (Central Government) தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வமான செய்தியும் இன்னும் வரவில்லை என்றாலும் இதற்கு முன்னர் நடந்தது போல இந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படியில் நான்கு சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 46% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெற்று வருகிறார்கள். இது நான்கு சதவீதம் அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 50 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி எப்போது அதிகரிக்கப்படுகின்றது?

பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தப்படுகிறது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் டிஏ (DA) நான்கு சதவீத அதிகரிப்பட்டது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பும் நான்கு சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)

அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் பிற கொடுப்பனவுகளிலும் அதிகரிப்பு இருக்கும். குறிப்பாக ஏழாவது உதயக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினாளல் வீட்டு வாடகை கொடுப்பனவில் (House Rent Allowance) அதிகபட்சமாக மூன்று சதவீத அதிகரிப்பு இருக்கும். இது மட்டும் இன்றி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் இதனால் அதிகமாகும். இது அவர்களுக்கு மிகப்பெரிய் பொருளாதார நிவாரணத்தை அளிக்கும்.

அரியர் தொகையும் கிடைக்கும்

மார்ச் மாதம் ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்தால் ஏப்ரல் மாத சம்பளத்துடன் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் கிடைக்கும். எனினும், ஜனவரி முதலான அகவிலைப்படி அதிகரிப்பின் அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு வரும். இதனால் ஏப்ரல் மாதம் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் மிகப்பெரிய தொகை வரவு வைக்கப்படும்.

அகவிலைப்படியில் (Dearness Alowance) நான்கு சதவிகித அதிகரிப்பு இருக்கும் என்ற செய்தி ஊடகங்களில் வரத் தொடங்கியது முதல் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் இது குறித்து இன்னும் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து எந்தவித அறிக்கையோ செய்தியோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *