உடல் பருமனால் கவலையா? பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ஓவர் வெயிட்டுடன் கவலையும் போய்விடும்
Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்நாட்களில் பலரிடம் காணப்படும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பொதுவாக உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால் இதை குறைப்பது மிகப்பெரிய ஒரு கடினமான பணியாக இருக்கின்றது. நமது ஆரோக்கியமற்ற உணவு முறையும் வாழ்க்கை முறையும் எடை அதிகரிப்பதற்கான முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.
உடல் எடையை குறைக்க பலர் பலவித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் சிலருக்கு இவை அனைத்திற்கும் நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் இவற்றால் முழுமையான பலன்கள் கிடைப்பதில்லை. சில எளிய இயற்கையான வழிகளின் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம். இதில் காய்களும் பழங்களும் நமக்கு பெரிதும் உதவுகின்றன.
உடல் எடையை குறைக்க அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். நம் நாட்டில் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய, விலை அதிகம் இல்லாத, அனைவரும் வாங்கக்கூடிய, அனைவரும் எளிதாக உட்கொள்ளக் கூடிய பப்பாளி எடை இழப்பு பயணத்தில் நமக்கு ஒரு உகந்த துணையாக இருக்கும். பப்பாளிப்பழம் கொண்டு உடல் எடை குறைப்பதற்கான (Weight Loss) வழிகளை இங்கே காணலாம்.
உடல் எடையை குறைக்க பப்பாளி (Weight Loss With Papaya)
பப்பாளியில் (Papaya) அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்களும், நார்ச்சத்தும் மிக அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள பப்பைன் என்ற eன்சைன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க பப்பாளியில் தொப்பை ழொபுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்கும் தன்மையும் உள்ளது என்பது மிகச் சிலருக்கு தான் தெரியும்.
பப்பாளி கொண்டு உடல் எடை குறைக்க அதை நம் உணவில் இந்த வகைகளை அதை சேர்க்கலாம்.
காலை உணவில் பப்பாளி
காலை உணவிலேயே (Breakfast) பப்பாளியை நாம் உட்கொள்ள தொடங்கலாம். இதற்கு பப்பாளி சாலட் உட்கொள்வது ஒரு சிறந்த வழியாக இருக்கும். இதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் பப்பாளியை ஓட்ஸுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
மதிய உணவு
மதிய உணவிலும் (Lunch) பப்பாளி சாலட் சாப்பிடலாம். பப்பாளியை கீரை, உப்பு, பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ஊட்டச்சத்து அளவு பன்மடங்காக அதிகரிக்கும். இப்படி சாப்பிட்டால் சுவையும் நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் பப்பாளி சாறும் குடிக்கலாம். பப்பாளி சாறு குடிப்பதால் உடல் எடை மிக வேகமாக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை சிற்றுண்டி
மாலை வேளையில் பசி எடுக்கும் நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்க்கு எனக்கு பதிலாக பப்பாளியை சாப்பிட்டு உட்கொள்ளலாம். இதற்கு பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அப்படியே சாப்பிடலாம். அல்லது, அன்னாசிப்பழம் சேர்த்து ஸ்மூத்தி தயார் செய்து அதனை உட்கொள்ளலாம். இதனால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும், வயிறும் நிரம்பி உணர்வுடன் இருக்கும்.
இரவு உணவு
இரவு உணவை (Dinner) உட்கொண்ட பிறகு பப்பாளியை உட்கொள்வதால் பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இரவு உணவிற்கு பிறகு இதை ஒரு இனிப்பு போல சாப்பிடலாம். இதனால் கொழுப்பு குறைவதுடன் உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதற்கும் இது உதவியாக இருக்கும்.