3-வது முறையாக நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி !
3-வது முறையாக நாளை சென்னை வர இருக்கிறார். நாளை பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சியிலும், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்ட பிறகு ஒரு தடவை பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு அவர் வந்து செல்லக்கூடும்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் மொத்தம் 8 அல்லது 9 கூட்டங்களில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களுக்கு பிரதமர் மோடி சென்று பிரசாரம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 நகரங்களை தேர்வு செய்யும் பணியை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
பிரதமர் மோடியின் தென்னிந்திய பயணத்துக்கு ஏற்ப தமிழக சுற்றுப்பயணம் மற்றும் பிரசார கூட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது