வெறும் ரூ.30,000 ரூபாயில் துவங்கிய நிறுவனம் ரூ.730 கோடிக்கு விற்பனை – Blue Dart வெற்றி கதை..!
இந்தியாவில் 1980களில் சிறு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்புவதிலும், மக்கள் வெளிநாடுகளுக்கு கொரியர் அனுப்புவதிலும் பெரும் சிக்கலை சந்தித்தனர். அந்த பிரச்னைக்கு தீர்வு காண பிறந்தது தான் ப்ளூடார்ட் நிறுவனம்.
1980களில் இந்தியாவின் ஏற்றுமதி துறை 12.74 பில்லியன் டாலர்களாக இருந்தது, இருப்பினும், சிறு பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு போதிய வசதிகள் இல்லை. அப்போது 30 வயதான துஷார் ஜானி தனது நண்பர்களோடு இணைந்து உருவாக்கியது தான் ப்ளூடார்ட் நிறுவனம். இரண்டு நண்பர்களோடு இணைந்து வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ப்ளூடார்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
1983 ஆம் ஆண்டு 200 சதுர அடி பரப்பில் தொடங்கப்பட்ட ப்ளூடார்ட் நிறுவனத்தின் பிசினஸ் மாடல் எளிமையானது, சிறு பேக்கேஜ்களை விமானம் மூலம் டெலிவரி செய்வது. இதற்காக துஷார் பிரிட்டனை சேர்ந்த கல்கோ எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இதனை அடுத்து இந்தியாவின் முதல் சர்வதேச கொரியர் டெலிவரி நிறுவனம் செயல்படத் தொடங்கியது.
டிராக்கிங் வசதி: மக்கள் எதிர்பார்த்தபடி பொருட்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்தாலும், அதில் ஒரு பிரச்சனை இருப்பதை கண்டறிந்தார். அதாவது ஒரு கொரியர் அனுப்பியவர்கள் அந்த கொரியர் எந்த இடத்தில் உள்ளது என்பதை டிராக் செய்வதற்கான வசதி இல்லை. எனவே ஒரு இதற்காக காஸ்மட் என்ற ஒரு ட்ராக்கிங் மென்பொருளை உருவாக்கினார்.
இந்த மென்பொருள் மூலம் ஒரு கொரியரை அனுப்புபவர்கள் அந்த கொரியர் தற்போது எங்கு உள்ளது எந்த இடத்தில் உள்ளது உரியவரிடம் சென்று சேர்ந்து விட்டதா அல்லது எப்போது சென்று சேரும் என்பதை தெரிந்து கொண்டனர்.
முதன்முறையாக சரக்கு விமானம் வாங்கிய நிறுவனம்: இதனால் ப்ளூ டார்ட் பெரும்பாலான மக்களின் விருப்பமான கொரியர் சேவை நிறுவனமாக மாறியது. 1994 ஆம் ஆண்டு ப்ளூ டார்ட் நிறுவனம் பொது நிறுவனமாக அறிவிக்கப்பட்டு ஐபிஓ வெளியிட்டது. இதன் மூலம் 38,000 கோடி ரூபாயை இந்த நிறுவனம் திரட்டியது. இதனை அடுத்து அதுவரை வெளிநாடுகளுக்கு மட்டுமே கொரியர் டெலிவரி செய்து வந்த ப்ளூ டார்ட் நிறுவனம் உள்நாட்டிலும் கொரியர் சேவையை தொடங்கியது.
1995 ஆம் ஆண்டு ப்ளூ டார்ட் நிறுவனம் 2 போயிங் இரண்டு சரக்கு விமானங்களை வாங்கியது. முதன்முறையாக அரசு சாரா ஒரு நிறுவனம் இந்தியாவில் சரக்கு விமானத்தை சொந்தமாக வாங்கி பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். நிறுவனத்தின் கிளைகள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தன. 1995 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு 100 கோடியாக உயர்ந்தது.
5,000 கோடி வருவாய்: இந்தியாவில் கிட்டத்தட்ட 1000 இடங்களிலிருந்து ப்ளூ டார்ட் நிறுவனம் சேவையை வழங்கியது. 2001 ஆம் ஆண்டு மூன்றாவதாக ஒரு விமானத்தை வாங்கினார் துஷார். இதன் மூலம் ப்ளூ டார்ட் நிறுவனத்தின் வருமானம் 287 கோடி என உயர்ந்தது.
2002 ஆம் ஆண்டு ஃபெடரல் எக்ஸ்பிரஸ் உடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்ட ப்ளூ டார்ட் நிறுவனம் உலகன் நம்பர் ஒன் ஏர் எக்ஸ்ப்ரஸ் நிறுவனமான டிஎச்எல் உடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை போட்டது. இதனை மேலும் இரண்டு சரக்கு விமானங்களை வாங்கி ஒரு நாளைக்கு 1 லட்சம் டெலிவரிகளை மேற்கொண்டது.
2004ஆம் ஆண்டு டிஎச்எல் நிறுவனம் ப்ளூடார்ட்டை 730 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது இந்தியாவில் நம்பர் 1 டெலிவரி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 2023இல் இந்த நிறுவனத்தின் வருவாய் 5000 கோடி என உயர்ந்தது. நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்தும் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.