ஜடேஜா-லாம் ஒரு பவுலரா? இது தான் நடக்குது.. உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹட்டின்

இந்திய அணியின் முக்கிய ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அணியின் முக்கிய ஸ்பின்னராகவும் இருக்கிறார். ஆனால், அஸ்வின் போலவோ, குல்தீப் யாதவ் போலவோ ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் நிறைய உத்திகள் இருக்காது.

அதன் காரணமாகவே சிறந்த ஸ்பின்னர்களை பற்றி பேசும் யாரும் ஜடேஜா பற்றி பேசுவதில்லை. ஆனாலும், எந்த ஸ்பின் உத்திகளும் இல்லாமல் ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது பந்துவீச்சில் விக்கெட் வீழ்வது ஒருபுறம் இருக்க ரன் குவிக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். அது ஏன்? அது பற்றிய ரகசியத்தை கூறி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹட்டின்.

அவர் ஜடேஜா உடன் தான் பேசியது குறித்தும், அப்போது அவர் தனது பந்துவீச்சு பற்றி தன்னிடம் கூறிய விஷயங்களை வைத்து தான் ஜடேஜா ஸ்பின் பந்துவீச்சில் எந்த டெக்னிக்கும் இல்லாமல் பெரிதாக என்ன செய்து விட முடியும்? என நினைத்ததாகவும், ஆனால், பின்னர் பேட்ஸ்மேன்கள் ஏன் திணறுகின்றனர் என புரிந்து கொண்டதாகவும் விளக்கிக் கூறி இருக்கிறார்.

“ஒரு டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஜடேஜா உடன் பேசுவது மிக சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், எல்லா ஸ்பின்னர்களும், ஒருவருக்கு ஒருவர், “நீங்கள் பந்தை கீழே வீசுகிறீர்களா? அல்லது மேல் புறமாக சுழல விட்டு வீசுகிறீர்களா?” என பேசிக் கொள்வோம். ஆனால் ஜடேஜா, “நான் ஸ்டம்ப்பை நோக்கி வீசுவேன்” என்பார். அதை மட்டும் வைத்துக் கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்? என நாம் கேட்போம்”

“ஆனால், அவர் நான் ஸ்டம்ப்பை நோக்கி வீசுவேன். அதன் பின் பிட்ச் அதை பார்த்துக் கொள்ளும். நீங்கள் பந்து திரும்பப் போகிறது என நினைப்பீர்கள். ஆனால், பந்து நேராக வந்தால் என்ன செய்வீர்கள்? சில சமயம் பந்து நேராக செல்லும் என்பார் ஜடேஜா”

“அதே போலவே நாம் பேட்டிங் செய்யும் போது இந்த பந்து நேராக வருமா? என்ற கேள்வி எழும். அதன் பின்னர் அவரிடம் நீங்கள் எப்படி அந்த பந்தை வீசினீர்கள் எனக் கேட்டால் நான் ஸ்டம்ப்பை நோக்கி வீசினேன். ஆனால், பந்து சறுக்கிக் கொண்டு சென்றது என்பார்” என்று விளக்கினார் பிராட் ஹட்டின். ஜடேஜா நேராக ஸ்டம்ப்பை நோக்கி மட்டுமே வீசுகிறார். ஆனால், பிட்ச் சில சமயம் அதை ஸ்பின் பந்தாக மாற்றுகிறது. இந்த எளிய வித்தையை வைத்தே ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான ஸ்பின்னராக மாறி இருப்பது வியப்புக்குரிய விஷயம் தான்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *