உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு – லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அரபு நாடான சவுதி அரேபியா அமைத்து வருகிறது.
இந்த சர்வதேச விமான நிலையம் மூலம் சுமார் 150, 000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது
கிங் சல்மான் எனும் இந்த சர்வதேச விமான நிலையம் சவுதி தலைநகரான ரியாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
150,000 வேலை வாய்ப்பு
அதில் சுமார் 57 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட ஆறு ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 2030 ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்படுமாயின் சுமார் 12 கோடி பயணிகள் பயணம் செய்ய ஏற்ற வசதிகள் காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, சவூதி அரேபியாவின் எல்லையை ஒட்டிய யேமனில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், ரியாத் போன்ற இடங்கள் பயணத்திற்கு பாதுகாப்பான பிரதேசங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.