இந்த 3 நாட்டவர்களில் இவர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை… பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து தீவிர இஸ்லாமியவாத கருத்துக்களை கொண்ட வெறுப்பு பரப்புரையாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது தடுக்கப்படும் பிரதமர் ரிஷி சுனக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதம் அதிகரித்துள்ளது
பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் புதிய திட்டத்தின் கீழ் இந்த நடைமுறை சாத்தியப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமீப ஆண்டுகளாக பிரித்தானியாவில் மத அடிப்படைவாதம் அதிகரித்துள்ளது தொடர்பில் அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வெளிநாட்டவர்களில் மிக ஆபத்தான மத அடிப்படைவாதிகளை அடையாளம் காணும் பொருட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் விசா எச்சரிக்கை பட்டியலிலும் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இனி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியாதபடி தடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகம் மற்றும் பல மதக் கொள்கைகள் சில மத அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே தற்போது குறிப்பிட்ட மூன்று நாட்டவர்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றும் நடவடிக்கை
இந்த நாட்டின் விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் இந்த நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்படியான நபர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிய வந்தால் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என ரிஷி சுனக் குறிப்பிட்டிந்தார்.

மட்டுமின்றி, பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் மத அடிப்படைவாதிகள் ஊடுருவாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *