எல்லாம் “ஜவான்” செய்த மேஜிக்.. அட்லீக்காக காத்திருக்கும் பாம்பே ஹீரோஸ் – அம்பானி வீட்டில் நடந்த அட்ராசிட்டி!
பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுடைய நண்பன் மற்றும் எந்திரன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன் பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆர்யாவின் “ராஜா ராணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அட்லீ குமார்.
அதைத்தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் நடிகை கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் “தெறி”, “மெர்சல்” மற்றும் “பிகில்” என்று ஹாட்ரிக் வெற்றியை பிரபல நடிகர் விஜய் அவர்களை வைத்து கொடுத்த ஒரே இயக்குனர் அட்லி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “பிகில்” திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களை இயக்காத அட்லி, கடந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட் உலகின் பாஷாவான ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தை இயக்கி உலக அளவில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தார். கோலிவுட் உலகில் மட்டுமில்லாமல் பாலிவுட் உலகிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக அட்லீ மாறினார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த அம்பானியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் ஒன்றிணைந்து அவரை வரவேற்றனர். அதன் பிறகு பாம்பே ஹீரோஸ் எல்லாம் அட்லி எப்பொழுது தங்கள் பக்கம் திரும்புவார், அவரை கேட்ச் பிடிக்கலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜவான் திரைப்படத்தின் வெற்றி அட்லியின் புகழை பாம்பேயில் பெரிய அளவில் பரவச் செய்துள்ளது. பல முன்னணி ஹீரோக்கள் அவருடன் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் காணொளியாக இது அமைந்துள்ளது.