அம்பானி மகன் வெயிட் போட்டது ஏன்? 108 கிலோ உடம்புடன் போராடும் ஆனந்த் அம்பானியின் கதை!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிககும் அவரது காதலி ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த ஆண்டே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 வரை திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசியி ஆனந்த் அம்பானியின் பேச்சு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. வாழ்க்கை முழுவதும் உடல் உபாதைகளுடன் போராடி வருவதைக் குறிப்பிட்டுப் பேச்சிய அவர் தனக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். அதைக் கேட்ட தந்தை முகேஷ் அம்பானி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த்தின் வாழ்க்கை போராட்டத்தை அருகில் இருந்து பார்த்தவர். ஆஸ்துமா நோயினால் ஏற்பட்ட ஸ்டெராய்டு பிரச்சினையால் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார் ஆனந்த் அம்பானி.

ஆஸ்துமா:

ஆஸ்துமாவுக்கான சிகிச்சையின் விளைவாக நிறைய எடை அதிகரித்தது. ஆனந்த் முன்பு 208 கிலோ எடையுடன் இருந்தார். ஆஸ்துமா நோயாளிகள் உடற்பயிற்சி செய்தும், சுறுசுறுப்பாக இருப்பதும் கடினமாக இருக்கும். மேலும் சிகிச்சைக்காக நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்வது வழக்கத்தை விட அதிக பசியை உண்டாக்கும். இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

இதனிடையே, 2016இல், ஆனந்த் எடையைக் குறைத்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் நம்பமுடியாத அளவுக்கு உடல் எடையைக் குறைத்தது பலருக்கும் அதேபோன்ற உத்வேகத்தை அளித்தது. அந்த காலக்கட்டத்தில் ஆனந்த் 18 மாதங்களுக்குள் 108 கிலோ எடையை இழந்தார்.

2017ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் பேசிய தாய் நீதா அம்பானி, “ஆனந்த் தீவிர ஆஸ்துமா நோயாளியாக இருந்ததால், நிறைய ஸ்டெராய்டுகளைப் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது” என்றும், “அதனால்தான் அவர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்” என்றும் விளக்கினார்.

எடைக் குறைப்பு:

“… நாங்கள் இன்னும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுகிறோம். இந்தப் பிரச்சினையுடன் பல குழந்தைகள் உள்ளனர். தாய்மார்கள் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். உங்கள் பிள்ளையின் உடல் எடையை குறைக்க நீங்கள் தான் ஊக்கப்படுத்த வேண்டும். நாங்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்று சில காலம் தங்கி உடல் பருமனுக்கு சிகிச்சை எடுக்க வைத்தோம். இருந்தாலும் நான் தொடர்ந்து அவருடன் பழக்கத்தில் இருக்க முடியும்” என்றும் சொல்லியுள்ளார் நீதா அம்பானி.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது பயிற்சியாளர் வினோத் சன்னா அவருக்கான பயிற்சித் திட்டத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. 16 ஒர்க்அவுட் நுட்பங்களில் நிபுணராகவும், பல பாலிவுட் பிரபலங்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்தவர். ஆனந்த் தனது மருந்துகளில் தலையிடாமல் உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தைத் அவர்தான் பரிந்துரை செய்தார்.

மீண்டும் உடல் பருமன்:

2020ஆம் ஆண்டு ஆனந்தின் காதலி ராதிகா மெர்ச்சன்ட்டின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இருந்து கசிந்த வீடியோவில் காட்சிகளில் ஆனந்த் மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார் என்று தெரிந்தது. டிசம்பர் 2022இல் சகோதரி இஷா அம்பானிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது வெளியான வீடியோவிலும் ஆனந்த் உடல் எடை அதிகரித்திருப்பது கவனிக்கப்பட்டது.

இப்போது, திருமணத்திற்கு முந்தைய விழாக்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதும், நெட்டிசன்கள் பலர் ஆனந்த் அம்பானியின் உடல் எடையைக் குறிப்பிட்டு உருவக் கேலி செய்தனர். ஒரு பயனர், “அவர் மீண்டும் பெரிதாகக் கொழுத்துவிட்டார். அம்பானி மீண்டும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டரா?” என்று தெரிவித்தார்.

“பணக்காரராக இருக்கும் மோசமான கணவன் அல்லது மருமகனை விட ஆரோக்கியமான கணவனும் மருமகனு மேலானாவர்கள்” என்று மற்றொருவர் தெரிவித்தார்.

ஆனால், ஆனந்த் அம்பானி இதற்கு முன் செய்ததைப் போல மீண்டும் எடையைக் குறைத்து அனைவருக்கும் ஆச்சரியம் அளிப்பார் என்று இன்னும் சில பயனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அசைக்க முடியாத உறுதியுடன், எந்த தடையையும் கடக்க முடியும் என்று காட்டிய ஆனந்த் அம்பானி மீண்டும் உடல் பருமனில் இருந்து மீண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கைத் திரும்புவார் என்பதே அவரது நலன் விரும்பும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *