அஜித் மகள் பிறந்தநாள்.. நேரில் வந்து வாழ்த்திய நடிகர் விஜய், புகைப்படம் இதோ
அஜித் – விஜய்
தமிழ் சினிமாவின் இரு தூண்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளனர்.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
விஜய் – அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் இருந்தாலும், அவர்கள் இருவரும் எப்போதுமே நல்ல நண்பர்களாக தான் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு அஜித்தின் தந்தை மறைந்தார். அப்போது நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஜித் மகளை வாழ்த்திய விஜய்
இதுமட்டுமின்றி அஜித் வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களிலும் விஜய் கலந்துகொண்டுள்ளனர். அப்படி தான் ஒரு முறை, அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் அன்று நேரில் சென்றுள்ளார் விஜய். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் அஜித், விஜய், ஷாலினி மற்றும் அஜித்தின் மகள் அனோஷ்கா இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..