வாஸ்து சாஸ்திரப்படி அலமாரியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு இடத்தில் வைக்க வேண்டும்.
செடியாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அதை அதற்கேற்ற இடத்தில் வைக்கும் போது தான் வீட்டிற்கு செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
வாஸ்து முறைப்படி நாம் அதிலுள்ள விதிகளை கடைபிடிக்கும் போது தான் வீட்டில் செல்வமும் செழிப்பும் வந்து சேரும்.
அந்த வகையில் வீட்டில் இருக்கும் அலமாரியை எந்த இடத்தில் வைத்தால் நன்மை தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரம்
அலுமாரி என்பது நமது உடைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் வைப்பதற்காக இருக்கப்படும் ஒரு பொருளாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி அலமாரியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
இவ்வாறு வைக்கும் போது வீட்டில் பணப்புழக்கம் குறையாது. வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனை குறையும். அலமாரியின் கதவுகள் தென்மேற்கு திசை நோக்கி திறக்கப்பட கூடாது.
இதற்கான காரணம் வீட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக காணப்படும் மற்றும் அலமாரி உங்கள் படுக்கை அறையில் சுவருடன் படாமல் வைக்கப்பட வேண்டும்.
அலமாரியை தரையில் நேரடியாக வைக்காமல் முதலில் ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு ஸ்டாண்ட் வைத்து வைக்க வேண்டும்.
வாஸ்து பார்வையில், இரும்பு அல்லது மர அலமாரியை வைத்திருப்பது சிறந்தது என்று கருதப்படுகிறது.
அலமாரிகளில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், கண்ணாடிதான் வீட்டுச் சண்டைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது